Enable Javscript for better performance
சுவரொட்டிப் பலகையாக மாறிய வழிகாட்டிப் பலகை- Dinamani

சுடச்சுட

    

    திருக்குவளை அருகே உள்ள சாட்டியக்குடியில் வழிகாட்டிப் பலகை சுவரொட்டிப் பலகையாக மாறியுள்ளது .
    கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் சாட்டியக்குடி கிராமத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் சுவரொட்டியை ஒட்டி, வழிகாட்டிப் பலகையை சுவரொட்டி பலகையாக மாற்றியுள்ளனர். இதனால், வெளியூரில் இருந்து வரும் நபர்கள் வழிதெரியாமல், மாற்று வழியில் சென்று விடுகின்றனர்.
    எனவே, இவ்வாறு வழிகாட்டிப் பலகையின் மீது சுவரொட்டிகளை ஒட்டி, அதன் நோக்கத்தையே சிதைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai