Enable Javscript for better performance
பாமக நிர்வாகி மீது தேர்தல் விதி மீறல் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தின்போது விதி மீறலில் ஈடுபட்டதாக பாமக நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
    மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணியை ஆதரித்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திங்கள்கிழமை இருசக்கர வாகனங்களில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சாவடி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கட்சித் தொண்டர்களின் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் நிரப்பப்பட்டது. இதற்கான ரூ. 8,236 மிதிப்பிலான ரசீதுகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். 
    இதுதொடர்பாக, தேர்தல் செலவுக் கணக்குப் பிரிவு பறக்கும் படை அதிகாரி ஜி. தையல்நாயகி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை பாமக நகரப் பொறுப்பாளர் நடராஜன், பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் க. கோபிநாத் ஆகிய இருவர் மீது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai