Enable Javscript for better performance
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்கள் நலனுக்கானது: இரா. முத்தரசன்- Dinamani

சுடச்சுட

    

    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்கள் நலனுக்கானது: இரா. முத்தரசன்

    By DIN  |   Published on : 27th March 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்கள் நலனுக்கானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். 
    நாகை மாவட்டம், கீழ்வேளூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் இரா. முத்தரசன் பேசியது:
    பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்புவதற்கு அவரின் சர்வாதிகாரப் போக்கே காரணம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. சர்வாதிகாரமே ஓங்கி நிற்கும். 
    நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் பேரழிவை சந்தித்தன. ஒரு கோடிக்கும் மேலான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்திக்க வரவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாகச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். இதேபோல், மக்கள் பாதிக்கப்
    படும்போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்கும் கொள்கைப் பிடிப்புக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துதான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணி வாக்குகளைச் சேகரிப்பதற்காக மட்டுமே உருவாகிய கூட்டணி அல்ல. மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் கூட்டணி என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அதிருப்தியளிக்கக் கூடியதாக இருக்கிறது. 
    திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறை என்ற பெயரில் கட்சிக் கொடிக் கம்பங்கள்அகற்றப்படுவது கண்டனத்துக்குரியது என்றார் அவர். தொடர்ந்து,  நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர்  எம். செல்வராசுவை அவர் அறிமுகப்படுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai