Enable Javscript for better performance
மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை தவறாமல் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை தவறாமல் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 27th March 2019 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களைத் தவறாமல் வாக்குப் பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
    நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் உறுதிமொழி பத்திரங்களை மாணவ, மாணவியருக்கு வழங்கி, அவர் மேலும் பேசியது : 
    மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து, தங்கள் வாக்கைப் பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.  மேலும், தங்களுக்குத் தெரிந்தவர்களையும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். 
    வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் உறுதிமொழி பத்திரங்களைப் பெற்றுள்ள மாணவ, மாணவியர், அந்தப் பத்திரங்களை தங்கள் பெற்றோரிடம் கொண்டு சேர்த்து, அவர்களைத் தவறாமல் வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்.
    நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், நாகை வட்டாட்சியர் சங்கர், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜகோபால் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai