Enable Javscript for better performance
மின்கம்பங்களைச் சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகே பனங்காட்டாங்குடியில் சாயும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    பனங்காட்டாங்குடி செல்லும் பகுதியில் விளைநிலத்தில் உள்ள பல மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதேபோல் வயல் பகுதியில் செல்லும் மின்கம்பிகள் தலையில் உரசும் வகையில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடையின்போது அறுவடை இயந்திரம் சென்று வரவும், டிராக்டரை வைத்து உழும்போதும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. வயல்களிலிருந்து டிராக்டர்களில் வைக்கோல்களை ஏற்றிச் செல்லும்போது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
    ஆகையால் மின்சார வாரியத்தினர் இந்த மின்கம்பங்களை சீரமைத்து, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai