Enable Javscript for better performance
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழக அரசு பழிவாங்குகிறது: க. மீனாட்சிசுந்தரம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழக அரசு பழிவாங்குகிறது: க. மீனாட்சிசுந்தரம் 

    By DIN  |   Published on : 28th March 2019 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தமிழக அரசு பழிவாங்குகிறது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் கூறினார்.  
    சீர்காழியில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது உரிமைக்காகப் போராடியபோது, அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தேர்தல் காலத்திலும் ரத்து செய்யாமல் தமிழக அரசு பழிவாங்கி வருகிறது. இந்த அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயகக் கடமைகளை சிறப்பாக ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா 5 ஆண்டுகளுக்குப் பணி நியமன தடைச் சட்டத்தை கொண்டுவந்தார்.  இந்த சட்டத்தை மு. கருணாநிதி ரத்து செய்தார். தற்போதைய அரசு பணிநியமனத் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லையே தவிர, அந்த சட்டத்தில் உள்ள ஷரத்தை பயன்படுத்திவருகிறது. 
    ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்கும்போது மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதைத் தவிர்த்துவிட்டு, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கிடையே மாற்றி வழங்கலாம் என்றார் அவர். இந்த பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், திமுக நகரச் செயலாளர் சுப்பராயன், பொது தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் அப்பர் சுந்தரம், கோடங்குடி சங்கர் ஆகியோர் 
    உடனிருந்தனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai