Enable Javscript for better performance
ஆவணம் சமர்ப்பித்தவரிடம் பணம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கான ஆவணத்தை ஒப்படைத்தவரிடம் அந்த பணம் வழங்கப்பட்டது.
    மயிலாடுதுறை வட்டம், அகரகீரங்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், கூட்டுறவு தணிக்கை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
    அப்போது, அந்த வழியாக வந்த காரில், திருவாரூர் ஐநூற்றுப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த வி.கே.கே. ராமமூர்த்தி என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.94 ஆயிரத்து 550  பணம் கொண்டுவந்தது தெரியவந்தது. 
    அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மயிலாடுதுறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எம். புனிதாவிடம் ஒப்படைத்தார்.
    இந்நிலையில், வி.கே.கே.ராமமூர்த்தி புதன்கிழமை காலை திருவாரூரில் உள்ள தனியார் வங்கியில் இருந்து அந்த பணத்தை எடுத்ததற்கான ஆவணத்தை வங்கியில் இருந்து பெற்று, சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, ரூ. 94, 500 அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai