Enable Javscript for better performance
கொள்ளிடம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளிடம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  ஆசைமணி, கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
    கொள்ளிடம் ஒன்றியம், அரசூரிலிருந்து  பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் ஆசைமணி, அரசூர், எருக்கூர், புத்தூர், கொள்ளிடம், சோதியக்குடி, வடரெங்கம், பனங்காட்டாங்குடி, ஆர்ப்பாக்கம், ஆரப்பள்ளம், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.
    அப்போது, பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளருக்கு கட்சியினர் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளித்தனர். இந்த பிரசாரத்தில் எம்எல்ஏ பி.வி. பாரதி, அதிமுக ஒன்றியச் செயலாளர் நற்குணன், முன்னாள் எம்எல்ஏ ம. சக்தி, பாமக மாவட்டச் செயலாளர் ரெ. அன்பழகன், தமாகா இளைஞரணி மாவட்டச் செயலாளர் வரதராஜன், தேமுதிக மாவட்டப் பொறுப்பாளர் ஜலபதி, பாஜக பொறுப்பாளர் நேதாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai