Enable Javscript for better performance
திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்:  மாணவர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்:  மாணவர்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 28th March 2019 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
    நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டல அளவிலான திறனாய்வுப் போட்டிகள் திருவாரூரில் அண்மையில் நடைபெற்றன. இதில், சீர்காழி எழில்மலர் மெட்ரிக். பள்ளி மாணவி பி. லெட்சுமிபிரபா 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், மாணவர் ஆர். சரண் மாணவர்களுக்கான உயரம் தாண்டுதலில் 9-ஆவது இடத்தையும் பிடித்து, மாநில அளவிலானப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
    இதையொட்டி, இவர்கள் இருவருக்கும், பயிற்சியளித்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் என். விஜய், கே. அகல்யா ஆகியோருக்கும் பள்ளித் தாளாளர் ஆர். செல்வம், செயலாளர் ஆர். பாலவேலாயுதம், பொருளாளர் கே. அன்பழகன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும்,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் சார்பில்  இருவருக்கும் தலா ரூ. 6 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை பள்ளியின் பொருளாளர் கே. அன்பழகன், நிர்வாக அலுவலர் ஆர். பாலசுப்பிரமணியன், முதல்வர் எஸ். சத்தீஸ்குமார் ஆகியோர் வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai