Enable Javscript for better performance
தேர்தல் பொதுப் பார்வையாளரை நேரில் சந்திக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளரை, நேரில் சந்தித்து தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் விஜய்குமார், நாகை அரசினர் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ளார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், தினமும் காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணிக்குள், நாகை அரசினர் சுற்றுலா மாளிகையில் தேர்தல் பொதுப் பார்வையாளரைச் சந்தித்து நேரடியாக புகார் அளிக்கலாம்.
    பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் என விருப்பமுள்ளவர்கள், தேர்தல் பொதுப் பார்வையாளரை சந்தித்து புகார்களைத் தெரிவிக்கலாம். நேரடியாக சந்திக்க இயலாதவர்கள், 63693 42351 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அவரை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai