Enable Javscript for better performance
நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன், திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் புதன் கிழமை வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
    திருமருகல் ஒன்றியம், கொங்கராயநல்லூர், அம்பல், பொறக்குடி, ஏர்வாடி, இடையாத்தங்குடி, ,திருமருகல், திருக்கண்ணபுரம், வாழ்குடி மற்றும் பனங்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும், திட்டச்சேரி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன் பிரசாரம் மேற்கொண்டு, வாக்குகள் சேகரித்தார்.
    தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், மீன் வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.ஏ. ஜெயபால், நாகை அதிமுக நகரச் செயலாளர் தங்க. கதிரவன், திருமருகல் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தேமுதிக  நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரவநாதன், மாநில பொதுக் குழு உறுப்பினர் செந்தில் குமார், பாமக மாநில நிர்வாகி ஷாகுல் ஹமீது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்தழகன், பாஜக ஒன்றியத் தலைவர் சத்தியவிஜயன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai