Enable Javscript for better performance
போராட்டம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    திருவெண்காடு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
    திருவெண்காடு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி மற்றும் விஷக்கடிக்கு மருந்து, வட்டார மருத்துவ அலுவலர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி அந்த சுகாதார நிலையம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணிக் கட்சியினர் அறிவித்
    திருந்தனர்.
    இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக திருவெண்காடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுப்பிரியா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாகை மாவட்ட சுகாதாரப் பணி இணை இயக்குநர் சண்முகசுந்தரம், கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சசிக்குமார், போராட்டக் குழுத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
    இதில், திருவெண்காடு மருத்துவமனையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai