Enable Javscript for better performance
மண்ணும், மக்களும் பாதுகாப்பு பெற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்- Dinamani

சுடச்சுட

    

    மண்ணும், மக்களும் பாதுகாப்பு பெற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

    By DIN  |   Published on : 28th March 2019 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்ணுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
    வேதாரண்யத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பணி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பேசியது:
    மண்ணைக் காக்க மத்திய அரசும், மக்களைக்காக்க மாநில அரசும் செயல்படுவது அவசியம். அந்த வகையில் பாஜக-அதிமுக கூட்டணிக்கே வெற்றி அவசியம் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
    கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டில் ஒரு இடத்தில் கூட மதக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பதவியேற்க முக்கிய பங்காற்றியது பாஜகதான். அவர், இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக விடாமல் தடுத்தது காங்கிரஸும், திமுகவும்தான. எந்த வல்லரசு நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக பேசக் கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. 
    அதற்காக பாஜகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கமாட்டோம். மேக்கேதாட்டு, காவிரி நீர் பங்கீடு போன்ற பிரச்னைகளில் பாஜகவை எதிர்த்தோம். காவிரி, கச்சத்தீவு போன்ற பிரச்னைகளில் திமுக விட்டுக்கொடுத்தது, ஆனால், நாங்கள் சட்டத் தீர்வுக்கு நடவடிக்கை எடுத்தோம் என்றார் அமைச்சர்.
    கூட்டத்தில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசும்போது, "எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாதமானது. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்' என்றார்.
    கூட்டத்தில், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் எம். சரவணன் பங்கேற்று வாக்குகள் கேட்டுப் பேசினார்.
    பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.கே. வேதரத்தினம், அதிமுக நிர்வாகிகள்  வழக்குரைஞர் சுப்பையன், சண்முகராஜ், கிரிதரன், பாமக நிர்வாகிகள் அசோகன், ம.ப சாமி, தேமுதிக நிர்வாகி வைரவநாதன் மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai