Enable Javscript for better performance
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

    By DIN  |   Published on : 28th March 2019 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.
    நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் முழு வீச்சில் பணியாற்ற, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். நிறைவில், வேட்பாளர் எம். செல்வராசு, கூட்டணிக் கட்சி செயல்வீரர்களின் ஆதரவைக் கோரி பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai