Enable Javscript for better performance
மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற பாடுபட வேண்டும்: சீர்காழி எம்எல்ஏ- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற பாடுபட வேண்டும்: சீர்காழி எம்எல்ஏ

    By DIN  |   Published on : 28th March 2019 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சீர்காழி பேரவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற கட்சியினர் பாடுபட வேண்டும் என்று எம்எல்ஏ பி.வி. பாரதி வேண்டுகோள் விடுத்தார்.
    மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து சீர்காழி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகள்தோறும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெருந்தோட்டம் ஊராட்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சீர்காழி ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெய. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சந்திரசேகரன், மாவட்டப் பொருளாளர் செல்லையன், பாமக மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், தமாகாவைச் சேர்ந்த கோவி.பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
    இக்கூட்டத்தில் சீர்காழிஎம்எல்ஏ பி.வி. பாரதி பேசும்போது, "மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக பாடுபடவேண்டும்.இதற்காக வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும். குறிப்பாக சீர்காழி தொகுதியில் அதிக வாக்குகளை பெற பாடுபட வேண்டும்' என்றார்.
    இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் சக்தி, பூராசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமாறன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai