Enable Javscript for better performance
மயிலாடுதுறை தொகுதியில் 33 வேட்புமனுக்கள் ஏற்பு: 12 மனுக்கள் நிராகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை தொகுதியில் 33 வேட்புமனுக்கள் ஏற்பு: 12 மனுக்கள் நிராகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 45 வேட்புமனுக்களில் 33 மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகப் போட்டியிடவும் 45 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், அதிமுக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் சார்பில் 4 மனுக்களும், திமுக  வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் சார்பில் 5 மனுக்களும், நாம் தமிழர் கட்சி சார்பில் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மற்ற கட்சியினர் தலா ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான சீ. சுரேஷ்குமார், தேர்தல் பொதுப் பார்வையாளர் விஜய்குமார் மற்றும் வேட்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
    வேட்புமனுக்கள் மீதான கூராய்வின் நிறைவில், திமுக, அதிமுக, அமமுக, மநீம, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் உள்பட 33 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. மாற்று வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த கூடுதல் வேட்புமனுக்கள் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் உள்பட 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai