Enable Javscript for better performance
மயிலாடுதுறை, நாகை தொகுதிகளில் ஓ.பி.எஸ். இன்று பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை மற்றும் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து,  தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை (மார்ச் 28) பிரசாரம் மேற்கொள்கிறார்.
    தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மற்றும் நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு கோரி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
    வியாழக்கிழமை காலை நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து புறப்படும் அவர், காலை 9 மணிக்கு செம்பனார்கோவில் கடைவீதியிலும், காலை 10.15 மணிக்கு குத்தாலம் கடைவீதியிலும்,  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணிக்கு ஆதரவு கோரி பிரசாரம் மேற்கொள்கிறார்.  இதைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம், பேரளம் கடைவீதியில், நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணனை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார். 
    பின்னர், மாலை 4 மணியளவில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டு,  திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம் மற்றும் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன் ஆகியோருக்கு அவர் வாக்குகள் சேகரிக்கிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai