Enable Javscript for better performance
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 28th March 2019 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகளின் விழிப்புணர்வுப் பேரணி நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.
    மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில்  இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார்.  வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடனும், விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட வாகனங்களுடனும் திரளான மாற்றுத் திறனாளிகள், மாணவ, மாணவியர், சிறப்பாசிரியர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்தப் பேரணி, நாகை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai