தரங்கம்பாடி மீனவர்கள் 6-ஆவது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை
By DIN | Published On : 02nd May 2019 09:16 AM | Last Updated : 02nd May 2019 09:16 AM | அ+அ அ- |

தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் பானி புயல் எதிரொலியாக மீனவர்கள் 6-ஆவது நாள்களாக புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஏப்ரல் 15-ஆம் தேதி மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் மற்றும் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல கூடாது என மீன்வளத் துறை அறிவுறுத்தி
யுள்ளது.
இதனால், தரங்கம்பாடி தாலுக்கா உள்ளிட்ட சந்திரபாடி, சின்னூர்பேட்டை, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட படகுகளை பழுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் ஆகியற் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தடைகாலத்தில் ஃபைபர் படகு மற்றும் நாட்டுப் படகு குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று பானி புயலாக மாறியுள்ளது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தரங்கம்பாடியில் ஃபைபர் படகு, நாட்டுப் படகுகளில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் 6-ஆவது நாளாக புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லாமல், தங்களது
ஃபைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.