உணவுப் பொருள் விற்பனையாளர்கள் விழிப்புணர்வுக் கூட்டம்

நாகையில் உணவுப் பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையில் உணவுப் பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் மற்றும் செய்தித்தாள்களில் உணவுப் பொருள்களை வைப்பதைத் தவிர்ப்பது, பழங்களைப் பழுக்க வைக்க ரசாயன முறைகளைக் கையாளுவதைத் தவிர்ப்பது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களின் பயன்பாடுகளைத் தவிர்ப்பது ஆகியவை குறித்து உணவுப் பொருள்கள் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, நகராட்சி உணவுப் பாதுகாப்பு  அலுவலர் ஏ.டி.அன்பழகன் தலைமை வகித்தார். இந்திய வர்த்தகத் தொழிற்குழுமத் தலைவர் ராமச்சந்திரன், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் உரிமையாளர் சங்க நாகை மாவட்டத் தலைவர் முரா. முருகையன், மாநிலத் துணைத் தலைவர் பி.என்.குப்புசாமி, காய், கனி விற்பனையாளர் சங்கத் தலைவர் ஜெயக்கொடி, வெளிப்பாளையம் வணிகர் நலச் சங்க செயலாளர் ரஜினி, நுகர்வோர் கூட்டமைப்புத் தலைவர் வழக்குரைஞர் பாஷ்யம், வணிகர் சங்க நிர்வாகிகள் சந்திரபோஸ், மகேஷ் ஆகியோர் பேசினர்.
உணவகங்கள், தேநீர்க் கடைகள், இனிப்பகங்களின் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com