மேடைப் பேச்சு பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 07th May 2019 08:13 AM | Last Updated : 07th May 2019 08:13 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் வள்ளலார் தருமச்சாலை சார்பில், அதன் சுயதொழில் பயிற்சி மையத்தில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, ப்ரியம் அறக்கட்டளை நிறுவனர் பிரபு தலைமை வகித்தார். கவிஞர் தேவி சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தார். திரைப்பட இணை இயக்குநர் சிவகுமார் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். வேதாரண்யம் வள்ளலார் தருமச்சாலை நிர்வாகியும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான தமிழ்த் தூதன், தன்னார்வலர்கள் மூர்த்தி, வீரமணி, தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.