முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா
By DIN | Published On : 15th May 2019 08:43 AM | Last Updated : 15th May 2019 08:43 AM | அ+அ அ- |

வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்குவளை அருகே உள்ள திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயிலில் அம்பாள் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, இக்கோயிலில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்படி, செவ்வாய்க்கிழமை சிறப்பு மலர் அலங்காரத்தில் பூத வாகனத்தின் மீது அமர்ந்து சந்திரசேகரும், பாலினும் நன்மொழியாள் அம்பாளும் வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வரும் மே 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை கோயில் செயல் அலுவலர் கா. ஆறுமுகம் மேற்கொண்டுள்ளார்.