நேரு யுவகேந்திரா தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th May 2019 08:42 AM | Last Updated : 15th May 2019 08:42 AM | அ+அ அ- |

நேரு யுவகேந்திரா இளையோர் தொண்டர் பணிக்கு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 28 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி - எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுநிலை பட்டதாரி வரை. தொண்டர் பணி பெறுவோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள், நாகை, சட்டையப்பர் தெற்கு வீதியில் உள்ள மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று, சாதிச் சான்று, 3 புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மே 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.