அன்னையர் தின விழா: வேளாக்குறிச்சி ஆதீனம் பங்கேற்பு
By DIN | Published On : 16th May 2019 07:26 AM | Last Updated : 16th May 2019 07:26 AM | அ+அ அ- |

குத்தாலம் ஆதிசங்கரர் பேரவையின் அன்னையர் தின விருதுகள் வழங்கும் விழா குத்தாலம் ராஜ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பேரவைத் தலைவர் ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் கே. செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசார்ய சுவாமிகள் கலந்து கொண்டு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பழைய கூடலூர் இரெ. ராஜமாணிக்கத்தின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட 8 பேருக்கு அன்னையர் தின விழா விருதுகள் வழங்கி அருளாசி கூறினார்.
விருதுபெற்ற அனைவருக்கும் உத்திராட்ச மாலை, தங்க மோதிரம், தலைகிரீடம்,பொன்னாடை அணிவித்து, பொற்கிழி தலா ரூ. 5ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் சாமிநாதன், அமைப்பாளர் மணிகண்டன், ஆலோசகர் ஏஆர்சி விஸ்வநாதன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.