சுடச்சுட

  

  முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, இந்து மக்கள் கட்சி சார்பில் தர்ப்பணம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை செய்யப்படவுள்ளது என அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன்
   தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கு, வெள்ளிக்கிழமை (மே 17) வாராணசி மற்றும் காசியில் தமிழீழம் மலர்ந்திட கூட்டுப் பிரார்த்தனையும், மே 18-இல் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகள்,  தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும் கங்கைக்கரையில் நடைபெறஉள்ளது. காசியில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொள்கிறார். அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நதிக்கரைகளிலும் தர்ப்பண நிகழ்வும் கோயில்களில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. அந்த வகையில், சனிக்கிழமை (மே 18) சீர்காழி உப்பனாற்றங்கரையில் தர்ப்பணமும், சட்டைநாதர் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai