சுடச்சுட

    

    ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க பண்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா

    By DIN  |   Published on : 17th May 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்புப் பயிற்சி முகாமின், நிறைவு விழா மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 
    நிகழ்ச்சிக்கு, செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் என். குடியரசு தலைமை வகித்தார். தணிக்கையாளர் கே. பிரசன்னா முன்னிலை வகித்தார். முகாம் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க தென் தமிழக அமைப்பாளர் ஏ. செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
    இதில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். முடிவில், முகாம் செயலாளர் கல்யாண்சிங் நன்றி தெரிவித்தார்.
    கடந்த ஏப்ரல் 26}ஆம் தேதி தொடங்கிய முகாம் வியாழக்கிழமை (மே 16) நிறைவடைகிறது. கடந்த 20 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில் 74 பேர் கலந்துகொண்டு, யோக கலை பயிற்சி, மரம் நடுதல், கோ பூஜை செய்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல், பிரசாரம் செய்தல், பாரத நாட்டின் தலைவர்கள் குறித்த அறிமுகம் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றனர்.
    முகாமில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் கோவி. சேதுராமன், மாவட்ட த்தலைவர் நாஞ்சில் பாலு, நகரத் தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai