வேதாரண்யத்தில் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு

வேதாரண்யத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள ஜே.பி. காம்ப்ளக்ஸ் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகம் ஞாயிறுக்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 9 முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும். 
மற்ற கடைகளுடன் ஒப்பிடும் நிலையில் அனைத்து மருந்துகளின் விலை சுமார் 60 முதல் 90 சதவீதம் வரை குறைவில் கிடைக்கும். மருத்துவர் பரிந்துரை சீட்டின்கீழ் மருந்துகள், மருத்துவம் சார்ந்த இதரப் பொருள்கள் கிடைக்கும்.
வேலை நாள்களில் உடல் எடை, ரத்த அழுத்தம் இலவசமாக பார்த்துக் கொள்ளவும், குறைந்த கட்டணத்தில் சர்க்கரை பரிசோதனையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன. 
மருந்தக திறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். தஞ்சை கோட்டச் செயலாளர் தங்க. வரதராஜன், மாவட்டச் செயலாளர்கள் பேட்டை சிவா (திருவாரூர்), நேதாஜி (நாகை), தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, அதிமுக பிரமுகர் பி.வி.கே. பிரபு, திமுக நகரச் செயலாளர் மா.மீ. புகழேந்தி, கல்வியாளர் பி.வி.ஆர். விவேக், வர்த்தகர் சங்க மாவட்டத் தலைவர் வேதநாயகம் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com