முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 18th May 2019 07:19 AM | Last Updated : 18th May 2019 07:19 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை வாக்கு எண்ணிக்கை மையத்தில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் 4 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். மேலும் கட்டுப்பாட்டு அறையைக் கண்காணிக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வெள்ளத்துரை(மயிலாடுதுறை), ஸ்ரீகாந்த் (வேதாரண்யம்) ஆகியோர் உடனிருந்தனர்.