முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேதாரண்யேசுவரர் கோயில் காளை சாவு
By DIN | Published On : 18th May 2019 07:21 AM | Last Updated : 18th May 2019 07:21 AM | அ+அ அ- |

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலின் கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த காளை மாடு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.
பிரதோஷத்தையொட்டி, காளை மாடு உயிரிழந்ததால் அந்த நேரத்தில் நடைபெறவிருந்த சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து, கோயில் நந்தவனப் பகுதியில் உரிய பரிகாரங்கள் செய்யப்பட்டு, காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரம் கழித்து பூஜை நடைபெற்றது.