குழகர் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:19 AM | Last Updated : 18th May 2019 07:19 AM | அ+அ அ- |

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் (குழகேசுவரர்) கோயில் என்றழைக்கப்படும் அமிர்தகடேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழாண்டுக்கான விசாகப் பெருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி நாள்தோறும் ரிஷபம், ஆட்டுக் கிடா, யானை, மயில் ஆகிய வாகனங்களில் எழுந்தருளினார். திருவிழா நாள்களில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு
வடம்பிடித்தனர்.