பிடாரி அம்மன் கோயிலில் மகோத்ஸவம்

நாகூர் பிடாரி அம்மன் கோயில் மகோத்ஸவ பெருவிழா நிகழ்வுகளில் ஒன்றான  தேர் வீதியுலா,

நாகூர் பிடாரி அம்மன் கோயில் மகோத்ஸவ பெருவிழா நிகழ்வுகளில் ஒன்றான  தேர் வீதியுலா, மகாபிஷேகம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நாகூர் பிடாரி அம்மன் கோயில் மகோத்ஸவ பெருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இவ்விழா மே 8-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி,  நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மகோத்ஸவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பிடாரி அம்மன் தேர் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், வீதியுலாவும் நடைபெற்றன. கோயில் முன் தொடங்கிய தேர் வீதியுலா, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து மகாபிஷேகம், பெரியாச்சி, வீரனார் படையல் மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில்  நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com