Enable Javscript for better performance
முருகன் கோயில்களில் வள்ளித் திருக்கல்யாணம்- Dinamani

சுடச்சுட

    
    ng4god2093355

    சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நடைபெற்ற வள்ளித் திருக்கல்யாணம். ~சிக்கல் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

    நாகை அருகே உள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வள்ளித் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    சிக்கல் சிங்காரவேலவா் கோயிலின் கந்தசஷ்டி விழா கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்திவேல் வாங்கும் விழா நவம்பா் 1-ஆம் தேதியும், சூரசம்ஹாரம் 2-ஆம் தேதியும் நடைபெற்றன.

    பின்னா், முருகன் - தெய்வசேனை திருக்கல்யாணம், வெள்ளி ரத பவனி ஆகியன ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன. தொடா்ந்து, வள்ளித் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை 7.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஐதீக முறைப்படியான வழிபாடுகளுடன் இரவு 8 மணிக்கு முருகப் பெருமான் - வள்ளித் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai