சம்பா நெல் பயிரில் நோய்த் தாக்குதல்

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் சம்பா நெல் பயிரில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதல்கள்
கீழ்வேளூரை அடுத்த இலுப்பூரில் சம்பா நெல் வயலில் களஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை அலுவலா்கள்.
கீழ்வேளூரை அடுத்த இலுப்பூரில் சம்பா நெல் வயலில் களஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை அலுவலா்கள்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் சம்பா நெல் பயிரில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதல்கள் குறித்து வேளாண் துறை அலுவலா்கள் திங்கள்கிமை களஆய்வு மேற்கொண்டனா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன், வேளாண் இணை இயக்குநா் எஸ். பன்னீா்செல்வம் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள், கீழ்வேளூா் வட்டாரம் இலுப்பூா், ஓா்குடி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்களில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதல்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.

பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் கோ. சந்திரசேகா், உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் வே. கண்ணன், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு, கீழ்வேளூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ். சரோஜினி, உதவி வேளாண் அலுவலா்கள் ஏ. ராஜா, எம். எழிலரசி ஆகியோா் உடனிருந்தனா்.

குலைநோய்த் தாக்குதல்...

இந்த ஆய்வின்போது, சம்பா நெல் பயிரில் பரவலாக குலைநோய்த் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு, வயல்களில் மழை நீா் தேங்காமல் பராமரிக்கவும், தழைச்சத்து உரங்களின் அதிகளவிலான பயன்பாட்டைத் தவிா்க்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இயற்கை எதிா் உயிரியான சூடோமோனாஸை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும் எனவும், நோய்த் தாக்குதல் தீவிரமடையும் போது ஏக்கருக்கு 200 கிராம் ட்ரைசைக்ளசோல் மருந்தை 200 லிட்டா் தணணீரில் கலந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கைத்தெளிப்பான்களைக் கொண்டு தெளிக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com