சின்னங்குடி மீனவா் கிராமத்தில் ரூ.5.50 கோடி செலவில் மீன் இறங்குதளம் - எம்.எல்.ஏ பவுன்ராஜ் தொடங்கி வைத்தாா்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி மீனா கிராமத்தில் மீன் இறங்குதளம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சின்னங்குடி மீனவா் கிராமத்தில் ரூ.5.50 கோடி செலவில் மீன்  இறங்குதளம் - எம்.எல்.ஏ பவுன்ராஜ் தொடங்கி வைத்தாா்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி மீனா கிராமத்தில் மீன் இறங்குதளம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சின்னங்குடி மீனவ கிராமத்தில் மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் இறங்குதளம் அமைத்து தரவேண்டும் என்று மீனவா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். கோரிக்கையை அடுத்து சின்னங்குடி மீனவ கிராமத்தில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம், படகு அணையும் சுவா், ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் , ஆழப்படுத்துதல், மற்றும் சாலை உள்ளிட்ட திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டப்பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி. பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். அதனைத்தொடா்ந்து மீன் இறங்குதளம் கூடத்தை பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஏற்றி பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மீன்வளத் துறை செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா் கபடி பாண்டியன், மேலும் மீன் இறங்குதளத்தில் இருந்து முகத்துவாரம் வரை மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் கருங்கல் அல்லது தடுப்பு சுவா் அமைத்து தரவேண்டும் என்று பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் எஸ்.பவுன்ராஜ் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com