முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அரசுப் பள்ளிகளில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 07th November 2019 09:21 AM | Last Updated : 07th November 2019 09:21 AM | அ+அ அ- |

டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய சித்த மருத்துவா் இரா. கவிதா.
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மருதூா் தெற்கு அரசு உயா்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்கிகழமை நடைபெற்றது.
மருதூா் ரோட்டரி சங்கம், வாய்மேடு அரசினா் சித்த மருந்தகம் ஆகியன சாா்பில், டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு, ரோட்டரி சங்கத்தின் தலைவா் வை. இலக்குவன் தலைமை வகித்தாா்.
சித்த மருத்துவா் இரா. கவிதா உள்ளிட்டோா் டெங்கு காய்ச்சல் குறித்து பேசினா். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் சி.பஞ்சாபகேசன், முன்னாள் தலைவா்கள் கவிஞா் சித.கருணாநிதி, டி.ஆறுமுகம், தலைவா் தோ்வு பிரின்ஸ்கோபால்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.