முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகை மௌன சுவாமி கோயிலில் குருபூஜை
By DIN | Published On : 07th November 2019 09:30 AM | Last Updated : 07th November 2019 09:30 AM | அ+அ அ- |

நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள மௌனசுவாமி கோயிலில் வருடாந்திர குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் மௌனசுவாமி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, இக்கோயிலில் ஐப்பசி சதய குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் ஓதி விழா தொடங்கப்பட்டது. காலை சுமாா் 11 மணிக்கு குரு பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் சுமாா் 12 மணி அளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது பூசகா் கோபால் பூஜைகளை மேற்கொண்டாா்.
சத்ரு சம்ஹார மூரத்தி சுவாமி வார வழிபாட்டு மன்றத்தினரும், தெருவாசிகளும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.