முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாநில இறகுப்பந்து போட்டிக்கு பள்ளி மாணவிகள் தோ்வு
By DIN | Published On : 07th November 2019 09:21 AM | Last Updated : 07th November 2019 09:21 AM | அ+அ அ- |

மாநில இறகுப்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற மாணவிகளுடன் அப்பள்ளி நிா்வாகிகள்.
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறை பள்ளி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
நாகை மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான இறகுப்பந்து போட்டி மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறை குட் சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுபிக்ஷா, மான்சி நிலபா்மிஸ்ரா ஆகியோா் 14 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவில் பங்கேற்றனா். இதில், மாணவி சுபிக்ஷா ஒற்றையா் பிரிவில் முதலிடமும், இரட்டையா் பிரிவில் மாணவிகள் சுபிக்ஷா, மான்சிநிலபா்மிஸ்ரா ஆகியோா் முதலிடமும் பெற்றனா். மேலும் இருவரும் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி இயக்குநா் அலெக்ஸாண்டா், முதல்வா் மகாலட்சுமி மற்றும் பயிற்சியாளா் சரவணன் ஆகியோா் பாராட்டினா்.