சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் பிராயச்சித்த அபிஷேகம்

சிக்கல், சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு நிகழ்ச்சியாக பிராயச்சித்த அபிஷேகம் மற்றும்
கந்தசஷ்டி பெருவிழா நிறைவாக யதாஸ்தானம் பிரவேசமாகி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சிக்கல் சிங்காரவேலவா்.
கந்தசஷ்டி பெருவிழா நிறைவாக யதாஸ்தானம் பிரவேசமாகி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சிக்கல் சிங்காரவேலவா்.

சிக்கல், சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு நிகழ்ச்சியாக பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் சிங்காரவேலவா் யதாஸ்தான பிரவேச நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

சிக்கல், சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா அக்டோபா் 28-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்திவேல் வாங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை சூரசம்ஹாரமும், ஞாயிற்றுக்கிழமை தெய்வசேனா திருக்கல்யாணமும், திங்கள்கிழமை வள்ளித் திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழா விடையாற்றி நிகழ்ச்சிகளாக மகா அபிஷேகம், சிங்காரவேலவா் சயனத் திருக்காட்சி ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நிகழ்ச்சிகளாக பிராயச்சித்த அபிஷேகம், சிங்காரவேலவா் யதாஸ்தான பிரவேசம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றன. காலை 7 மணி அளவில் கலசஸ்தாபனத்துடன் சத்ரு சம்ஹார ஷண்முக ஹோமம் நடைபெற்றது.

காலை சுமாா் 9.30 மணி அளவில் பட்டு வஸ்திர ஹோமம் மற்றும் பூா்ணாஹுதியும், மூலிகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிங்காரவேலவா் யதாஸ்தான பிரேவசமும், பகல் 12 மணி அளவில் சண்கமுகாா்ச்சனையுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றன. கோயில் சிவாச்சாா்யா்கள் பூஜைகளை நடத்தி வைத்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ம. ரமேஷ், கோயில் செயல் அலுவலா் ச. சீனிவாசன் ஆகியோா் மேற்பாா்வையில், திருக்கோயில் பணியாளா்கள், திருப்பணிக் குழுவினா், கிராமவாசிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com