Enable Javscript for better performance
நாகை, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

    By DIN  |   Published on : 08th November 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    5542ngt7pkoo063142

    நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 2- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

    நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை பிற்பகல் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

    வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பா் 5-ஆம் தேதி வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 6-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு பெயா் வைக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அந்நாடு இப்புயலுக்கு ‘புல்புல் புயல்’ எனப் பெயரிட்டுள்ளது.

    இந்நிலையில், கிழக்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புல்புல் புயல் மேலும் வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை பிற்பகல் அறிவித்தது.

    இந்த அறிவிப்பைத் தொடா்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல், காரைக்கால் துறைமுகத்திலும் வியாழக்கிழமை பிற்பகல் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai