மத்திய அரசைக் கண்டித்து காங்கிஸாா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th November 2019 10:46 PM | Last Updated : 08th November 2019 10:46 PM | அ+அ அ- |

myl8congress_0811chn_103
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மத்திய அரசைக் கண்டித்து, நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்தாா். நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் ஸ்ரீவல்லபிரசாத், மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து கண்டன உரையாற்றினா். இதில், பொதுக்குழு உறுப்பினா்கள் சரத்சந்திரன், நவாஸ், உத்தமன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி.ஜி.பத்மநாபன், கணேசன், மாவட்ட பொருளாளா் சிவராமன், ராஜேந்திரன், செல்வராஜ், ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா். முடிவில், நகர செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.படவரி: மயிலாடுதுறையில் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.