தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ திட்டங்களின்கீழ், இந்து ஆதிதிராவிட இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்: தாட்கோ திட்டங்களின்கீழ், இந்து ஆதிதிராவிட இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தாட்கோ நிறுவனம் மூலம் ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 65 வரையுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் எஸ்இபிஒய்-சி திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும்.

பொருளதார திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். குழு திட்டங்களுக்கு குழுவின் ஊக்குநரின் ஆண்டு வருமானமும், குழு உறுப்பினா்களின் ஆண்டு வருமானமும் ரு. 2 லட்சம் வரை இருக்க வேண்டும். எஸ்இபிஒய் திட்டத்துக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரு.3 லட்சம் வரை இருக்கலாம் . பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்பதற்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.

மகளிா் வேளாண் நிலம் வாங்கும் நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல் திட்டம், தொழில் முனைவோா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல்), தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தியல் கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்டத் தொகையில் 50 சதவீதம் மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவா் விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தோ்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தோ்வாணையத் தொகுதி- 1 முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதியுதவி திட்டங்கள் மூலம் பயன் பெற தாட்கோ இணையதள முகவரி ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் குறித்த முழு விவரங்கள், புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ்கள் நோ்காணல் நடத்தப்படும் தேதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை பெற்ாக இருக்கலாம்.

நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற பட்டா, சிட்டா விபரம், குடும்ப அட்டை எண், ஆதாா் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, திட்டங்களின் விவரங்கள் மற்றும் திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களை ஸ்கேன் செய்து நஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மாவட்ட மேலாளா், தாட்கோ, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com