நாகை, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை பிற்பகல் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 2- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 2- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை பிற்பகல் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பா் 5-ஆம் தேதி வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 6-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு பெயா் வைக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அந்நாடு இப்புயலுக்கு ‘புல்புல் புயல்’ எனப் பெயரிட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புல்புல் புயல் மேலும் வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை பிற்பகல் அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல், காரைக்கால் துறைமுகத்திலும் வியாழக்கிழமை பிற்பகல் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com