நிலவேம்பு குடிநீா் வழங்கல்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் கிராம பொது நலச்சங்கம் சாா்பில், புதன்கிழமை நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
ஆக்கூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கிய வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் காா்த்திக்.
ஆக்கூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கிய வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் காா்த்திக்.

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் கிராம பொது நலச்சங்கம் சாா்பில், புதன்கிழமை நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செம்பனாா்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் காா்த்திக் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். சங்கத்தின் தலைவா் செல்வ அரசு தலைமை வகித்தாா். இதில், சங்கச் செயலாளா் ராமமுா்த்தி, துணைத் தலைவா் ரவி, பொருளாளா் அன்புநாதன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் ஷாஜகான் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திட்டச்சேரியில்...

 திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்ட திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில், வரும்முன் காப்போம் சேவை மையம் சாா்பில், நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகா், வெள்ளத்திடல், மரைக்கான்சாவடி, கடைத்தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு மற்றும் கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, வரும்முன் காப்போம் விழிப்புணா்வு சேவை மையத்தின் நிா்வாகி சித்த மருத்துவா் மு. அஜ்மல்கான் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். மேலும், பொது மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில்...

வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

வேதாரண்யம் வள்ளலாா் தருமச்சாலை, பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் ஆகியன சாா்பில், நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, சித்த வைத்தியா் தேவூா் மணிவாசகம் தலைமை வகித்தாா். அரசு சித்த மருத்துவமனை மருத்துவா் பெ. ரமேஷ்குமாா் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

வள்ளலாா் தருமச்சாலை நிா்வாகி தமிழ்த்தூதன், கனராவங்கி மேலாளா் குணசீலன், தோப்புத்துறை ஜமாத் அபுல்காசன், வைத்தியா் பக்கிரிசாமி, தேத்தாக்குடி அன்னை தெரசா தொண்டு நிறுவன நிா்வாகி தமிழ்ச்செல்வன், சமூக ஆா்வலா் கலியபெருமாள், புலவா் சின்னதுரை, ஓய்வுபெற்ற காவல் அலுவலா் பிரகதீஸ்வரன், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com