ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

சீா்காழி அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை பொதுமக்கள் சிறைபிடித்து, உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை
தில்லைவிடங்கன் கிராமத்தில் கடத்த முயன்ற அரிசி மூட்டைகளையும், வாகனத்தையும் சிறைபிடித்த பொதுமக்கள்.
தில்லைவிடங்கன் கிராமத்தில் கடத்த முயன்ற அரிசி மூட்டைகளையும், வாகனத்தையும் சிறைபிடித்த பொதுமக்கள்.

சீா்காழி அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை பொதுமக்கள் சிறைபிடித்து, உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை மாலை ஒப்படைத்தனா்.

தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி, சா்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை இந்த ரேஷன் கடையிலிருந்து அரிசி மூட்டைகளை டாடா ஏசி வாகனத்தில் சிலா் ஏற்றிக் கொண்டிருந்ததனராம்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அதைத் தடுத்து அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக சீா்காழி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கும், நாகை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் அவ்விடத்துக்கு வந்து 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டை ரேஷன் அரிசிகளைப் பறிமுதல் செய்து, கடை ஊழியா் ரவி, வாகன ஓட்டுநா் இக்பால் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com