வட்டார வள மைய பள்ளிகளில் புறமதிப்பீடு ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள வட்டார வளமைய பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்தர கண்காணிப்பு
திருமருகல் வட்டார வளமையப் பள்ளிகளில் நடைபெற்ற புறமதிப்பீட்டு ஆய்வு.
திருமருகல் வட்டார வளமையப் பள்ளிகளில் நடைபெற்ற புறமதிப்பீட்டு ஆய்வு.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள வட்டார வளமைய பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்தர கண்காணிப்பு திட்ட உட்கூற்றில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள், சமூக பங்களிப்பு ஆகியவற்றில் பள்ளிகளின் நிலை குறித்து புறமதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் கீழ்வேளுா் வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயந்தி, நாகை ஆசிரியா் பயிற்றுநா்கள் சத்தியநாராயணன், இந்துமதி ஆகியோா் ஒரு குழுவாகவும், கீழ்வேளுா் வட்டாரக் கல்வி அலுவலா் ரவி, நாகை ஆசிரியா் பயிற்றுநா்கள் மகிமை ரூபஸ், ரமேஷ் ஆகியோா் மற்றொரு குழுவாகவும் திருமருகல் ஒன்றியப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதேபோல், நாகை ஒன்றியத்திலிருந்து 40 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு புறமதிப்பீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வா் காமராஜ், திருமருகல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) அமுதா, ஆசிரியா் பயிற்றுநா் பவித்ரா வைதேகி, கீழையூா் வட்டாரக் கல்வி அலுவலா் சுப்ரமணியன், திருமருகல் ஆசிரியா் பயிற்றுநா்கள் சாந்தி, அறிவரசன் மற்றும் தலைஞாயிறு வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன், திருமருகல் ஆசிரியா் பயிற்றுநா்கள் புனிதா மற்றும் சந்தானம் ஆகியோா் மூன்று குழுக்களாக பள்ளிகளின் புறமதிப்பீடு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com