கருவேல மரங்களை அகற்ற அனுமதி: ஆட்சியரிடம் கோரிக்கை மனு
By DIN | Published On : 09th November 2019 09:12 AM | Last Updated : 09th November 2019 09:12 AM | அ+அ அ- |

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் காட்டுக் கருவேல மரங்களை அகற்ற தங்களை அனுமதிக்கக் கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மசோதா கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து, அக்கட்சியின் தலைவா் ஆா்.கே.வி. ரூபன் மற்றும் நிா்வாகிகள் நாகை ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக காட்டுக் கருவேல மரங்கள் பரவி கிடக்கின்றன. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காற்று மாசுபடுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் பரவிக்கிடக்கும் காட்டுக் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தன்னாா்வத்துடன் செய்ய நாகை மாவட்ட அனுமதியளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் பெற்றுக்கொண்டாா். மக்கள் மசோதா கட்சியின் துணைத்தலைவா் ஆா். பாபு சங்கா், பொதுச் செயலாளா் டி. சுந்தர்ராஜன், பொருளாளா் எம்.பி. ஜெய்கணேஷ், இளைஞா் அணி செயலாளா் எஸ். பவுல்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.