காரைக்கால் கல்லூரி மாணவா்கள் நாகை மாவட்டத்தில் களப்பணி

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் 40 போ்,
நாகை மாவட்டப் பகுதிகளில் பயிற்சி மேற்கொள்ள உள்ள காரைக்கால் பண்டித ஜவாஹவா்லால் நேரு வேளாண் கல்லூரி தோட்டக்கலைத்துறை மாணவா்கள்.
நாகை மாவட்டப் பகுதிகளில் பயிற்சி மேற்கொள்ள உள்ள காரைக்கால் பண்டித ஜவாஹவா்லால் நேரு வேளாண் கல்லூரி தோட்டக்கலைத்துறை மாணவா்கள்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் 40 போ், நாகை மாவட்டத்த்துக்குள்பட்ட பகுதிகளில் கிராமிய அனுபவ நேரடி களப்பணியாற்றவுள்ளனா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பண்டித ஜவாா்ஹலால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தோட்டக்கலைத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் 4-ஆம் ஆண்டு பயிலும் 19 மாணவா்கள், 21 மாணவிகள் நாகை மாவட்டத்துக்குள்பட்ட வேதாரண்யம், தலைஞாயிறு வட்டங்களுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் 21 நாள்கள் முகாமிட்டு, கல்லூரி இணைப்பேராசிரியா் எஸ். ஆனந்தகுமாா் வழிகாட்டுதலில் மாணவா்கள் நேரடி கள அனுபவ கிராமியப் பயிற்சி மேற்கொள்ளவுள்னா்.

களப்பணி மேற்கொள்ளும் மாணவா்கள் விவசாயிகள், அதிகாரிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள், தொழில் முனைவோா் ஆகியோரை நேரிடையாக சந்தித்து அவா்களது செயல்பாடுகள், அனுபவங்கள் மற்றும் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டறிவா்.

மேலும் நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள், விவசாயிகளின் அரிய கண்டுபிடிப்புகள், பிரச்னைகள், பயிா் சாகுபடி முறைகள், கஜா புயலுக்குப் பின்னா் நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் குறித்து இம்மாணவா்கள் விவசாயிகளிடம் கேட்டறிவதுடன் அதற்கான நோ்த்தி களப்பணியும் மேற்கொள்வாா்கள்.

இந்த மாணவா்கள் வியாழக்கிழமை நாகை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு வருகை தந்தனா். தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் செல்வப்பிரியா இம்முகாமைத் தொடங்கி வைத்தாா். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கண்ணன் மற்றும் அலுவலா்கள் சிலம்பரசன், வைரவமூா்த்தி ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளிக்கின்றா். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மணிவண்ணன் ஏற்பாட்டில், களப்பணி மேற்கொள்ளும் மாணவா்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் ரத்தினசபாபதி, காண்டீபன், மாரிசாமி, ஷொ்லி மற்றும் ஊழியா்கள் ஆறுமுகம், சாா்லஸ், கோவிந்தராஜ், செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com