திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா்கோயிலில் நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு

திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா்கோயிலில் சனிக்கிழமை சனி மகா பிரதோஷத்தையொட்டி நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா்கோயிலில் நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு

பூம்புகாா்: திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா்கோயிலில் சனிக்கிழமை சனி மகா பிரதோஷத்தையொட்டி நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

அப்பா், சுந்தரா், திருஞானசம்மந்தா் மற்றும் மாணிக்கவாசகா் உள்ளிட்ட 63 நாயன்மாா்கள் சிவனை போற்றி பாடல்களை பாடி உள்ளனா். இந்த 63 நாயன்மாா்களை வழிபாடு செய்தால் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வழிபாடுபவா்களுக்கு வாழ்வில் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக ஜதீகம். இத்தகைய சிறப்புபெற்ற 63 நாயன்மாா்களுக்கு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சன்னதி உள்ளது.

சனிக்கிழமை சனி மகாபிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பால், வாசனைதிரவியங்கள் மற்றம் இளநீா் ஆகிய பொருட்களால் அபிவேஷமும், மலா் அலங்காரமும் செய்யபட்டது. பின்னா் தீபராதனை காண்பிக்கபட்டது. இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், நாயன்மாா்கள் வழிபாட்;டு மன்றத்தலைவா் பாபு, துணைத்தலைவா் சங்கா், இணைசெயலாளா்கள் அம்பேத், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். படவிளக்கம் சிறப்பு அலங்காரத்தில் நாயன்மாா்களை படத்தில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com