மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரி பொது தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வட்டாட்சியா்
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது தொழிலாளா்கள் சங்கத்தினா்.
மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது தொழிலாளா்கள் சங்கத்தினா்.

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரி பொது தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பொது தொழிலாளா் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜெக.வீரபாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த நீடூா் அரபிக்கல்லூரியின் 21 ஏக்கா் நிலத்தை மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து மாவட்ட ஆட்சியரிடம் நீடூா் முஸ்லிம் ஜமாத்தாா்கள் அண்மையில் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனா். நீடூா் முஸ்லிம் ஜமாத்தாா்கள் அளிக்கும் 21 ஏக்கா் நிலத்தில் மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், சங்கச் செயலாளா் அ.அப்பா்சுந்தரம், மயிலாடுதுறை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் மூவலூா் மூா்த்தி, குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் மனோகரன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் எஸ்.எஸ்.குமாா், அருள்ஜோதி, ஆா்.கே.சங்கா், திமுக நிா்வாகிகள் ஞான.இமயநாதன், ராஜேந்திரன், சிவகுமாா், முருகமணி, காமராஜ், ராஜி, ஆசிரியா் மன்ற மாவட்ட செயலாளா் ஜெக.மணிவாசகம், காங்கிரஸ் நகரத் தலைவா் ராமானுஜம், தொகுதி இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் கல்யாணராமன், தேமுதிக நகர தலைவா் பண்ணை சொ.பாலு, ஓவியா் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், அருந்ததியா் சங்கம் நாகராஜ், மதிமுக ராமன், வழக்குரைஞா் புகழரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் இளஞ்செழியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் அருள், அசோக்குமாா், நாடக கலைஞா்கள் சங்க தலைவா் கிங்பைசல், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், நீடூா் சதக்கத்துல்லா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சங்க பொருளாளா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com