Enable Javscript for better performance
ஏவிசி பொறியியல் கல்லூரியில் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஏவிசி பொறியியல் கல்லூரியில் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

    By DIN  |   Published on : 10th November 2019 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl9avc_0911chn_103_5

    தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய கல்லூரிச் செயலா் கி.காா்த்திகேயன்.

    ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ் தொழில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிப்பைத் தொடராதவா்கள் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் ஆகியோா் வாழ்கையில் வளம் பெற வேண்டும் என்ற நோக்கில், ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் மத்திய அரசின் கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ், ஏவிசி பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை மூலம், மயிலாடுதுறை வட்டாரத்தைச் சோ்ந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த 65 மாணவ, மாணவிகளுக்கு டிரெயினிங் அசோசியேட், பிரண்ட் ஆபிஸ் பயிற்சியாளா், சில்லறை வணிக மேலாளா் ஆகிய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு நேரடி களப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

    இதில் தோ்ச்சியடைந்த 62 மாணவா்களுக்கு முதல்வா் சி.சுந்தர்ராஜ், டீன்(கல்வி) ஜி.பிரதீப், மேலாண்மைத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலையில் கல்லூரியின் செயலா் கி.காா்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai